பின்வருவனவற்றுக்காக எங்களிடம் வாருங்கள்:
- நூலக அட்டை (library card) ஒன்றை இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கு. இரண்டு அடையாளச் சான்றுகள் உங்களுக்குத் தேவைப்படும், உங்களின் பெயர் மற்றும் ரொறன்ரோ முகவரியுடன் ஒன்றிருக்க வேண்டும்.
- o Microsoft Office (Word, Excel, PowerPoint) மற்றும் ஏனைய ஆதாரவளங்களைக் கொண்டிருக்கும் இணைய அணுகையுடனான மின்கணினி ஒன்றைப் பயன்படுத்துவதற்கு.
- o நூலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இலவச wifi ஐப் பயன்படுத்துவதற்கு.
- புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றைக் கிளையொன்றில் நேரில் அல்லது இணையத்தில் இரவல் வாங்குவதற்கு. நூலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் வெவ்வேறு மொழிகளில் கிடைக்கின்றன.
- o வேலை தேடுதலில், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலில் மற்றும் பலவற்றில் உங்களுக்கு உதவக்கூடிய குடியமர்வுப் பணியாளர் (settlement worker) ஒருவரைச் சந்திப்பதற்கு.
- o வளர்ந்தோரும் சிறுவர்களும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்க உதவும் பொருள்களை (English as a Second Language materials) இரவல் வாங்குவதற்கு.
- o ஆங்கிலம் கற்றல், சிறு வணிகத்தைத் தொடங்குதல், சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் வேலை தேடல் உள்ளடங்கலான பல்வேறு தலைப்புகளில் நிகழும் நிகழ்ச்சிகளில் (programs) கலந்துகொள்வதற்கு.
